Free Music Production Video Tutorials

↑ Grab this Headline Animator

செடியை ஆலமரமாக்கும் திட்டம்

Posted by Swamy Srinivasan aka Kittu Mama On 9:45 AM

வேதா வோட ஐடியாவில் தோன்றிய இந்த கதை செடியாக உருவெடுத்து ஆலாமரமாகத் திகழ்கிறது.

முதலில் மரத்திற்க்கு தண்ணி ஊற்றிய ஆசாமிகள்.

1. உஷாவோட கற்பனை
The Unusual Endings
"Ennadhan panra ava anga?" he wondered aloud, as he got out of the cab outside the building that flaunted a board that read "Amanushya vishayangaluku anugavum: Dr. JevitsJayaraj". Aniku kalaila, he had got a call, and pesinadhu Meeradhan. Aana he could notice the difference between the voice he had listened to 2 days ago and the one he heard in the morning. '2 days munnadi sema super-a veenai madhiri ketta kural iniku kaalaila eppadi husky-a vichitrama?', he shuddered for a moment recollecting the conversation he had.."Hello, iss it Vassisht, naan Meera" - there was an eerieness around the voice he heard...


2.
வேதாssss
மீராவின் குரலை இப்ப நினைத்தாலும் ஒரு பயம் அவன் மனதில் பரவியது. சட்டென்று நினைவை கலைத்தது அவன் கைப்பேசி. அவன் அதை எடுக்...
ட்ரிங்,ட்ரிங்
'சே நல்ல கட்டத்துல இப்படி போன் அடிக்குதே, சத்யா சத்யா போன் அடிக்குது பார் எடு'
ட்ரிங்,ட்ரிங்
'அடச்சே, இந்த அத்தியாயத்தை இன்னிக்கு பத்திரிக்கைக்கு அனுப்பனும் இந்த நேரம் பார்த்து எழுத இவ்ளோ தடங்கல்'
ட்ரிங்,ட்ரிங்
'இந்த சத்யா எங்க போய் தொலைஞ்சா? நானே போய் எடுக்க வேண்டியது தான்'
இவன் ஸ்பரிசத்திற்காக காத்திருந்தது போல் தொடர்ந்து அடித்த போனை எடுத்தான் எழுத்தாளன் சூர்யா.
'ஹலோ யாரு?'
'நான் தான்' என்று ரகசியம் பேசுவது போல் ஒரு பெண் குரல்
'அட யாருன்னு சொல்லித்தொலைங்க'
'மீரா பேசுறேன்'
'எந்த மீரா?'
'என்ன சூர்யா அதுக்குள்ள மறந்துட்ட? இப்ப தான என்னை பத்தி எழுதின?'
'என்னது? யாருங்க இது?'
'உன் கதையின் கதாபாத்திரம் மீரா' என்று கூறிய குரல் அவன் நினைவலைகளில் நீந்தி திரொலித்தது.
அதிர்ந்துப்போன சூர்யா தொலைப்பேசியை நழுவ விட்டான்...

3.
மு.கா.முத்து(அட மு.கார்த்திகேயன் பா)
ரத்தமெல்லாம் உறைய அப்படியே சேரில் அமர்ந்தான் சூர்யா..

யா..யார் போன் பண்ணி இருப்பா..

அவன் தலைக்குள்ளே ஆயிரம் கேள்விகள்... சரியாக அந்த நேரம் பார்த்து மின்சாரம் போய் அந்த இடமே கருங்கும்மென இருட்டாகியது.. நெஞ்சில் பயத்துடன் மெல்ல மெழுகுவர்த்தியை தேடி மெதுவாக அடி எடுத்து வைத்தான்.. அப்போ காற்றில் மெல்ல கொலுசு சத்தம் கேட்டது.. அந்த சத்தம் மெதுவாக இவனை நோக்கி வந்தது..எடுத்து வைத்த காலைக்கூட திரும்ப பின்னால் எடுத்து வைத்தான்.. கொலுசு சத்தம் நெருங்க நெருங்க மல்லிகைப்பூ வாசமும் இவன் நாசியை துளைத்தது.. சூர்யாவுக்கு அதிர்ச்சியில் தொண்டை வறண்டது..

சூர்யா.. எப்படி இருக்க சூர்யா.. காதல் தொய்த்த மயக்கம் கலந்த ஒரு பெண் குரல் கேட்டது.. இந்த இந்த குரலை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே என்று சூர்யா குழம்பிய போது..

என்ன சூர்யா..என்னை மறந்துட்டியா..நான் தான் நீ காதலிச்சு ஏமாத்துன மலர்விழி..

4.
பரணிssss
சூர்யா தொலைப்பேசியை நழுவ விட்டான்...
நழுவின தொலைப்பேசி, கட்டிலில் இருந்து உருண்டு வந்து கீழே குறட்டை விட்டு தூங்கி கொண்டிருந்த சுந்தரின் தலையில் "நச்" என்று அடித்தது.
எரிச்சலுடன் கண்விழித்த சுந்தர், தொலைப்பேசியை எடுத்து, "telephone 'அடிக்கிது'ன்னு சொன்னியே அது இந்த அடியத்தானா" என்றான். திகிலில் இருந்த சூர்யா, "டேய் phone-ல மீரா-டா" என்றான்.
"யாரு மீரா ஜாஸ்மினா, அவங்களுக்கும் s.j surya-வுக்கும் காதலாமே. நிச்சயதார்தம் கூட நடந்திடுச்சாமே, என்ன கொடுமடா, உலகம் அழிய போறது உண்மை தான் போல."
"டேய் அந்த மீரா இல்லடா"
"பின்ன, P.C Sriram-வோட மீராவா"
"என்ன கொலைக்காரன் ஆக்காத. என் கதையில வராளே அந்த மீரா"
"சர்தான். நேத்து nite-ஏ சொன்னேன் உன்கிட்ட, raw-வா அடிக்காத, உனக்கு தாங்காதுன்னு. இப்ப பாரு இன்னும் தெளியல".
"சனியனே, நான் தெளிவா தாண்டா இருக்கேன். line-ல இருக்கா நீயே பேசு".
சுந்தர் receiver-அ வாங்கி mouthpiece-ஐ காதுல கொடுத்து "அலோ" என்றான் வடிவேலு style-ல்.
டென்ஷனான சூர்யா, "நீ தெளிவா receiver-அ புடி" என்று மாற்றிக்கொடுத்தான்.
சுந்தர் மீண்டும் "அலோ" என்றான்.அந்த பக்கம் இருந்து சத்தம் ஏதும் இல்லை.
ஓரு பாடல் மட்டும் மெல்ல கசிந்து வந்தது.
"ரா ரா....."

5.
ப்ரியாssss
நழுவிய தொலைபேசியிலிருந்து "சூர்யா..." என்று அந்தக் குரல் வழிந்தது. ஓடி வந்து அதை எடுத்துப் பேசிய சத்யா, "அண்ணா, மயூரா பேசரா" என்று அவனை வித்தியாசமாக பார்த்தவாறே நீட்ட, "மயூராவா?" என்று இன்னும் பயம் தெளியாதவனாய் வாங்கினான்..

"லூஸூ! பெரிய பருப்பாட்டம் பேய் கதையெல்லாம் எழுதர. மயூரானு சொன்னா மீராவானு நடுங்கற?" கல கலவென சிரித்தாள் மயூரா. அவன் அத்தை மகள். கோவையில் இருக்கும் கோவைப்பழம்.

"ஏய் குரங்கு! யாரு நடுங்கறது? விஷயத்த சொல்லு"

"நான் இன்னிக்கு நைட் கிளம்பி ஃப்ரெண்ட் கல்யாணத்துக்காக அங்க வரேன்"

அடுத்த நாள்:

சேரன் எக்ஸ்ப்ரஸ் அதிலிருந்த பயணிகளைப் போலவே சோர்வாக வந்து ப்ளாட்ஃபார்மில் நின்றது.

"இந்த தடவை கண்டிப்பா நம்ம காதலை அவ கிட்ட சொல்லிடணும்" என்று யோசித்தவாறு எஸ்2 வந்து நிற்கும் இடத்தில் காத்திருந்த சூர்யா அதிர்ந்தான், அதிலிருந்து இறங்கிய மயூராவைப் பார்த்தல்ல, அவளுடன் கை கோர்த்தவாரு இறங்கிய அந்த இளைஞனைப் பார்த்து.

6.
dream>zzzz
சூர்யா மெதுவாக திரும்பி பார்த்தான்... பார்த்தால் அது அவன் அத்தை மகள் சீதா!
"அட குரங்கே, நீ தானா ... நான் கூட பயந்துட்டேன்"
"என்ன நீ காதலிச்சு, வேற ஒருத்தன் கல்யாணம் பண்ண மலர்விழி என்று நினைத்தியா?"
"வந்த உடனே ஆரம்பிச்சிட்டியா..ஆமா எப்போ வந்த திருச்சில இருந்து? Phone பண்ணறதில்ல? "
சத்யா: "யாரு கூட பேசரீங்க? ...கொஞ்ச நேரத்துக்கு முன்ன எதுக்கு கூப்பிடீங்க?..phone அ ஒழுங்க வைப்பதில்ல?"
"இங்க வந்து பாருடி யாரு என்று"
சூர்யா பேசி திரும்பினால் சீதா காணவில்லை..
"எங்க போனா அவ இதுக்குள்ள..."
"யாரு கூட பேசிக்கிட்டு இருக்கீங்க? "
"இப்போ தான் சீதா வந்த எங்க போன என்று தெரியல.. "
"சீதாவா? எப்போ வந்த திருச்சியில் இருந்து... ஒரு phone கூட பண்ணல "
"தெரியல.. சரி ...எங்கயாவது போகி இருப்ப..திரும்ப வருவா.. "
ட்ரிங்,ட்ரிங்,ட்ரிங்,ட்ரிங்
"நீ போய் எடு சத்யா .. போன முறைய யாரென்னு தெரியல.." சொல்லிவிட்டு தான் எழுதும் கதையை continue செய்ய உட்கார்ந்து பார்த்தான்.. எழுதிய கதையில், மீரா என்ற பெயருக்கு பதில் சீதா என்று இருந்தது ..அதிர்ச்சியில் உறைந்தான்!
"என்னாங்கா...!" சத்யா வின் அலறல் சத்தம் .உள்ள ஓடினா சத்யா மயக்கமுற்று தள்ளாடி நின்றாள். ஓடி போய் பிடித்து, சோபாவில் உட்கார வைத்து தண்ணி எடுத்து முகத்தில் தெளித்து.. "என்னடி ஆச்சு?"
"எண்ணங்க சீதாவும் உங்க friend மலர்விழியும் சேர்ந்து வந்த Bus ஆக்ஸிடெண்ட் ஆகி ரெண்டு பேரும்......" விம்மினாள்
சூரியாக்கு ஒரு முறை இதயம் நின்று பிறகு மீண்டும் துடித்தது..

7.
கடைசில கிட்டு மாமா ரீலு
நழுவின தொலைபேசி திடுக்கென்று நின்று போயிற்று. யார் செய்து இருப்பார்கள் என்றுயோசித்த வேளையில் தொலைபேசியின் காலர் ஐடி யினை நோட்டம் விட்டான் சூர்யா.

அவனுடைய அதிர்ஷ்ட்டம் நம்பர்கள் எதுவும் வரவில்லை. சத்யா கொஞ்சம் காபி கொடேன் என்றான் சூர்யா. இப்ப தானே குடிச்சீங்க என்ற வெறுப்புடன் சமையல் கட்டிர்க்குச் சென்றாள் சத்யா. திடீரென்று ஆஆஆ என்னங்க என்ற சத்தம் சமையல் அறையில் இருந்து ஒலித்தது. படேரென்று ஒடிப்போய் பார்த்தான் சத்யா. என்ன ஆச்சு என்ன ஆச்சு என்று நடுக்கத்துடன் கேட்டான். இத பாருங்க சக்கரை தீந்தே போச்சு என்றாள் யேக்கத்தோடு. இதுக்காடி இதுக்காடி கத்தின. காப்பியும் வேண்டாம் கீப்பியும் வேண்டாம் என்று கோவத்துடன் வெளியில் வந்து பார்த்தால் அவன் எழுதி கொண்டு இருந்த புத்தகம் பேனா எதுவும் அங்கு இல்லை. அய்யோ நான் எழுதின கதையை யாரோ எடுத்துக் கொண்டு போய் விட்டார்களே என்று நாயகன் கமல் மாதிரி தலையை தூக்கிக்கொண்டு அழுதான். வீட்டின் எல்லா பக்கமும் தேடிப்பார்த்தான் சத்யா. தமிழ் படம் போல் கீழே ஒரு தடயம் கிட்டியது. அதில் முரசு அஞ்சல் பதிவில் வேலை பார்பவர் வேலை அட்டை கிடைத்தது. சத்யா இந்த கதையை அனுப்ப இருந்ததோ ஆனந்த விகடனுக்கு. சத்யாவிர்க்கு சற்று புரிய ஆரமித்தது.
************************************************************************************

யெப்பா டங்கு வாரு எகுருது டோய். சரி சரி இன்னும் 2 ஆள மாட்டி விடலன்னா எனக்கு தூக்கம் வராது. கீழ இருக்கும் மரத்துக்கு தண்ணி ஊத்த நம்ப கோவில் பட்டி வீரலக்ஷுமி
G3 வையும் சண்டக் கோழி யையும் கோத்துவிட்டுட்டு நான் Escapeu.


|

8 comments

  1. Dreamzz Said,

    lol... nalla irundhadhu... :) oru marathula ithanai vithaamaana braches a?

    Posted on 1:13 PM

     
  2. எல்லா கிளைகளையும் மொத்தமா படிக்க ரொம்ப நல்லா இருந்தது..கிட்டு
    கடைசில நீங்களும் ஒரு கிளையை உண்டாக்கிட்டீங்க..
    வாழ்த்துக்கள் கிட்டு

    Posted on 3:50 PM

     
  3. Priya Said,

    ஆஹா மரத்த நல்லா வளர்த்திருக்கிங்க. வித்தியாசமான முடிவு (ஆனா முடிவு இல்ல)

    Posted on 5:14 PM

     
  4. @dreams
    thanks

    @mu.ka
    thanks

    @priya
    ennanga mugla irundha thanni fulla oothittaen. kadai avlo daan :)

    Posted on 5:52 PM

     
  5. G3 Said,

    Hello.. naan indha posta padikavae illa.. neenga enna tag pannadhayum paakavae illa :P

    Jokes apart.. kadhaiya supera twistiteenga.. :) Naan erkanavae bharani vitta edathula irundhey thanni vittu valathutten.. so me the escapes of india now :P

    Adhu seri.. adhu enna pudhu pattam kovil patti veeralakshminnu? Enakku kooda sollama?

    Posted on 12:16 PM

     
  6. hello sir,
    mudhalla kadhai ezhudhunavanga yarai yellam tag panni irukkanga nu pakalaiya?g3 kadhai ezhudhittanga.Priya tagged me.so no chance me taking the tag again.
    Iam sorry.But unga kadhaiyum nallaa irundhadhu,--SKM

    Posted on 6:34 PM

     
  7. Anonymous Said,

    சும்மா படிச்சிட்டே வந்தா அட நம்ம பேரு கூட இருக்கேன்னு பார்த்தேன்:) நல்லா தான் வளர்த்துருக்கீங்க கதையை:)

    Posted on 8:24 AM

     
  8. @sandai-kozhi
    indha maratha sariya paakkala. adaan tag pannittaen. mannikkavum :)

    @vedha
    nanri vedha

    Posted on 10:40 AM

     
Facebook Twitter Youtube Linked In Orkut