கடவுள்
===============================
ஏய் மானிடா !
முடிந்ததா இன்று ஒரு நாள் ???
விடிந்ததா மற்றும் ஒரு நாள் ???
புரிந்ததா புதிர் வாழ்க்கை ???
முடிந்ததா ஆசை வேட்கை ???
மானிடன்
===============================
கடவுளே !!
இந்த நாள் முடிந்தது
உன்தயவால் மறுநாளும் பிறந்தது
புதிருக்கு விடைதேடப் புடிக்குது
ஆசைகள் பேராசையாய் மாறுது
வாழ்க்கையே சில நேரம் கசக்குது
கடவுள்
================================
மானிடா !!
எங்களுக்கும் ஆசை உண்டு
பின் தொடரும் சோகமும் உண்டு
சில பேருக்கு மனைவிகள் ரொம்பவே உண்டு
எங்களின் துன்பங்களைக் காட்டிடும் ஈரத் துண்டு
வாழ்க்கை கீழேயும் ஒன்று தான் மேலேயும் ஒன்று தான்
உனக்காவது சாக வழி உண்டு
எங்களுக்கு பொறாமை அதைக் கண்டு
இருக்கும் வரை ரசித்து ஓடு
பொன்னான வாழ்க்கையை வாழத்தான் உனக்கென்ன கேடு
மானிடா
===========
ஆஹா
மேல இவ்வளோ கொழப்பமா
சரி சரி, இனிமே பொலம்பாம இருக்கோம்
Have a nice weekend God. (Sorry, பழக்க தோஷத்துல சொல்லிட்டேன்)
2 comments
Aaha.. kadavulayae polamba vittuteengala? :)
Posted on 7:16 AM
nalla venum! kadavulukku! :D
Posted on 9:17 AM