மானாட மயிலாட, அரசன் கொண்டாடும் வேளையில்
அடுத்தாட வந்தனள் ஓர் பருவ மங்கை
வில்லினமாய் ஆடிய அவளின் இடையினம், இடையிடையே வளைந்தது
வல்லினமெல்லினமெல்லாம் கற்றறிந்த அவ்வரசனின் இதயம், இடையிடையே துலைந்தது
மயிலுக்குத் துயிலனிந்தும், மானுக்குள் அவள் விழி புகுந்தும்
இருக்கத்தில் இருக்க முடியாமல் சிந்தித்தான் அவன்
மன்னவன் தான் என்றுலகமெல்லாம் போற்றினாலும், அவள்முன்
வெறும் மண் அவன் என்றெல்லாம் நினைத்துக் கொண்டான்
மன்னவா தென்னவா, புலவர்கள் சொன்னபோதும்
நடு நிலையில் இருந்த நானோ
பொன் இடையிலும் தளராத என்னிடையே
ஒரு பெண் இடையில் விழுந்தது ஏனோ??
போரிடையே சந்திப்பது மேல், த்ரோகி நீ என்று வீழ்த்தியிருப்பேன்
இப்பெண்ணிடையே என்செய்வேன், யாரடி நீ மோகினி???
3 comments
This comment has been removed by the author.
Posted on 11:29 AM
:-) Super po.
Posted on 11:32 AM
//மயிலுக்குத் துயிலனிந்தும், மானுக்குள் அவள் விழி புகுந்தும்
இருக்கத்தில் இருக்க முடியாமல் சிந்தித்தான் அவன்
மன்னவன் தான் என்றுலகமெல்லாம் போற்றினாலும், அவள்முன்
வெரும் மண் அவன் என்றெல்லாம் நினைத்துக் கொண்டான்
//
superu!
same topic heading :)
same pinch..
shreya eppadi irukka?
Posted on 4:36 PM