Enjoy Coffee with Anu as கூழ் with குப்பாயி :-)
வயக்கமா இந்த கொவளைல கூழ் குட்சி குட்சி எங்க வூட்லயும் கூழ் குடிக்காம இருக்க முடில. அதுலையும் நம்ம சோவ டப்பு போட்டு நட்தினு இருக்கும் "இதயம் மந்த்ரா" கூழ் நா கேக்கவா வோணும். தெனிக்கும் சோவ முட்சா, ஒரு 10 பாக்கட் கூழ் கிடைக்கும். எங்க வூட்டுக்காரரு ரொம்ப பேஜார் காடினா, இதோ இந்த பெரிய பக்கெட்ல கூழ் ஊத்தி கொட்து கேர் ஆக்கிடுவேன்ல. சரி நம்ப 100 தபா சோவ சோகா நட்தினதுக்கு இன்னிக்கி ஒருத்தர ஸ்பெசலா கூட்டியாந்துகரோம்.
அவருக்கு கொஞ்சம் மசாலாலாம் அர்ச்சி புதுசா மார்கெட்ல வராத இந்த கூழ் பாக்கட்ட கட்சில "கிப்டு ஹாம்பரா' கொடுக்க போரோம். சரி எவண்டா அவன்னு மன்சுல ஒடர்து இந்த குப்பாயிக்கு தெரியாது நென்சீங்களா. ஹ்ம்ம் இப்போ வர போரவன் பேர கேட்டாலே கொய்ந்தைங்கோ "ஜம்பு" பன்னுவானுங்கோ. அவன் அப்பன காட்டியே துள்ளி குத்சி நடிப்பான் இவன். 'லவ்ல கூட" இந்த கச்மாலம் அதே மாதிரி இவன் அப்பனாட்டம் பெய்லு. சரி இப்போ யார கூட்டியாந்துகோரோம் தெர்தா? .
அதுவும் இல்லாம என்னடா இவோ அவன் இவன்னு சொல்ரான்னு தானே யோசிக்கிரீங்கொ. நான் பாத்து வள்ந்தவங்கோ அவன். வர்துக்கொள்ளோ ஒரு சின்ன "கூழ் ப்ரேக்" உட்டுகரன். வர்டா ? பட்டா TV'ய வுட்டு எழுந்து போனீங்கோ, கூழ் குப்பாயி ராக்காயி ஆய்டுவா.
(After the break)
குப்பாயி : வா சொம்பு. ச்ச வா சிம்பு. வந்து குந்திக்கோ.
சிம்பு : என்ன குப்பாயி. இப்படி கூப்டுட்டியே
குப்பாயி : மன்சிக்கோ கொய்ந்த. இந்த பாழா போன சொம்புல கூழ் குட்சி ஒரு சின்ன டங் சிலிப் ஆய்ப்போச்சு.
சிம்பு : உன் ரவுசு தாங்க முடியல. ஹ்ம்ம் உன் கூட எவன் பேச முடியும்
குப்பாயி : அப்போ என் கூட இந்த சோல பேச மாட்டியா..என்ன கண்ணு அப்டி சொல்லிகுண
சிம்பு : அப்படி சொல்லுவனா. நீ கேளு. But பாத்து கேளு
குப்பாயி : சரி ரொம்போ நாளா உன்னாண்ட ஒரு கேள்வி கேக்கனும்னு இருந்தன். நீ தான் மொதொல்லோ ரஜினி பொண்ண டாவ் அட்சு கவுந்தியே. அப்புரம் இன்னாத்துக்கு நயந்தாரா ஒதட்ட எல்லாம் கட்ச்சு அவளையும் தாரந்துட்ட?
சிம்பு : குப்பாயி கிளரிட்டியே குப்பாயீ. இதுக்கு தான் இந்த மாரி Show எல்லாம் போக வேண்டாம்னு எங்க அப்ப சொன்னாரு. சரி நம்ப குப்பாயி தானேன்னு வந்தேன்.
குப்பாயி : சரி கண்ணு. நான் அத கேக்கல.
சிம்பு : இல்ல குப்பு. சொல்றன். நீயே கேட்ட அப்புரம் சொல்லாம இருப்பனா. என்னோட லவ் failure தான் ஒத்துக்கறன். But 2nd லவ்ல இருந்து நான் தான் வெலகினன். first லவ் தான் அப்படி ஆச்சு.
குப்பாயி : அப்போ கெட்டவன் படத்துல அப்படி 2ஆவது பொண்ண கய்ட்டி விடர கதையா கண்ணு
சிம்பு : நீ விட்டா படத்தையே போட்டு காட்ட சொல்லுவ. (விரல கை ஆட்டி) அது நடக்காதே
குப்பாயி : சரி எதுக்கு தேவையே இல்லாம வெரல ஆட்டி ஆட்டி பேசர. நீ இன்னும் நல்ல வளந்த அப்புரம் அப்படி செய் கண்ணு
சிம்பு : குப்பாயீ. நான் என்ன கொழந்தையா
குப்பாயி : அட, இன்டச்ட்ரில இன்னும் வளர்னும் சொன்னன் நானு.
சிம்பு : ஓஹ் அத சொன்னியா
குப்பாயி : நீ இஸ்கூல்ல கிலாஸ்க்கே போக மாட்டியாமே. எப்போ பாத்தாலும் மட்டைய தூக்கினு கிரிக்கட்டு ஆடுவியாமே
சிம்பு : எப்படி குப்பு. ச்ச எப்படி குப்பு இப்படி எல்லாம் கண்டு பிடிக்கிர
குப்பாயி : நானா கண்டு புட்சன். எவனோ போய்ட்டு வந்து சொல்லுவான். நானே கண்டு புட்சா மாதிரி கேப்பன்.
சிம்பு : இருந்தாலும் கலக்குர குப்பு நீ
குப்பாயி : சரி இந்த பக்கட்ல கூழ் குடிக்கிரியா ?
சிம்பு : எனக்கு 2 நாளா வயிர் சரில குப்பு. So வேணாம்
குப்பாயி : கதையா குதே. நான் மட்டும் பக்கட்ல குடிக்கணும். நீ குடிக்க மாட்டியா?
சிம்பு : ஹ்ம்ம் வேணும்னா கொஞ்சம் taste பாக்றன்.
Sponsor : (ஓடிவந்து) குப்பாயி. கொடுக்காத. கொடுக்காத
குப்பாயி : இன்னாது. கொடுக்காதையா?
Sponsor : ஆமாம். இந்த கூழ்ல மசாலால மயக்க மருந்து இருக்கு. தெரியாம இப்படி ஆகிடுச்சு. காத்தால என் wifeகு first கொடுத்தேன். அவ குடிச்ச அப்புறம் தான் தெறிஞ்சுது. ஒரு 2 மணி நேறம் அவ வாய திறக்காம நிம்மதியா இருந்ததுல இந்த program பத்தி மறந்து போச்சு. So அதான் வேகமா ஓடி வந்தேன். So Sorry சிம்பு. நீங்க வேணும்னா எங்களோட ஓல்ட் பாக்கட்டான மார்கட்ல இருக்கும் கூழ try பன்னுங்க
சிம்பு : விடுங்கடா சாமி. நீங்களும். உங்க கூழும்
1 Comment
:) ஹிஹி! சொம்புவ இன்னும்கொஞ்சம் கலாய்ச்சி இருக்கலாம்! :) அடுத்து தனுஸ் பிடிச்சுக்கொங்க!
Posted on 7:28 AM