கண்களுக்கு மாதுவையும் நாவிற்கு மதுவையும் தவிர என்ன சுகம் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்தான் கிஷ்முகுமார். எத்தனை நாளைக்கு தாண்டா இப்படி பிரம புடிச்சா மாதிரி எதையோ யோசிச்சிண்டு இருபன்னு அவன் தந்தையின் குரல் கேட்டு பீதியுடன் எழுந்தான் கிஷ்முகுமார். அவன் தந்தை அருகில் நிற்க முடியாமல் பதுங்கி பதுங்கி அந்த இடத்தை விட்டு கழண்டுக் கொண்டான்.
கிரிக்கட் விளையாடி நெத்தியில் டூமா கோலி சைஸில் ஏர்பட்ட வீக்கத்தை அடக்க முடியாமல் துடித்தான் கிஷ்மு. நெத்தியின் வலி வந்து வந்து போவதை விட அவன் தந்தையின் முகம் வந்து போவது தான் அவனை நடுங்க வைத்தது. எப்படி வீக்கத்தை மறைக்கலாம் என்று யோசித்து வீட்டிற்கு வேகமாக ஓடி வந்து ஐஸ் கட்டியை நெத்தியில் வைத்து வைத்து யாருக்கும் தெரியாமல் சற்று வீக்கத்தை குறைத்தான். அப்பா வரும் சமயம் பார்த்து குளிக்க போகும் பாவனையில் துண்டால் நெற்றியை மூடி மறைத்து நடன்தான். உள்ளே வரும்போதே சாயங்கால வேளைல என்னடா பெரிய குளியல் வேண்டி இருக்கு. போய் படிடா போடா என்று கர்ஜனித்தார். திவ்யா, காப்பி கொடுமா என்று கிஷ்மு தங்கையை மட்டும் செல்லமாக அழைத்தார். இந்த ஆளுக்கு அறிவே கிடையாது. எப்ப பார்த்தாலும் திட்றது என்று கூட இரண்டொரு சிறிய கெட்டை வார்த்தைகளையும் தூவிக் கொண்டே அவன் ரூமிர்குள் சென்றான் கிஷ்மு. எப்படியோ அடி பட்டதை காட்டாமல் தப்பிச்சோம்டா என்ற ஒரு சிற்றின்பத்துடன் புதகத்தை எடுத்துக் கொண்டு படிப்பதாக பாவலா காட்டினான்.
பல வருட சராசரி நிகழ்வுகளுக்குப் பிறகு ஆட்டு மந்தையோடு ஆடாய் அவனுக்கும் வேலை பார்க்க அமரிக்கா செல்லும் வாய்ப்பு கிடைத்தது. பிரிவென்பதே என்னவென்று தெரியாத அவனுக்கு திடீர் பிரிவு சற்று கசப்பாகத்தான் இருந்தது. இருப்பினும் வெளிநாடும்; வெளிநாடு போவதை உறவினர்கள் பார்ப்பதையும்; வெளிநாட்டில் சுற்றிப் பார்கும் ஆர்வமும்; அங்கு தக தகவென சுட்டெறிக்கும் வெட்டுக் கிளியின் காட்சிகளும் அவனை ஈர்த்துக் கொண்டு சென்று விட்டன.
ஒரு சில அமரிக்க வருடங்கள் போன பிறகு அவனுக்கு தந்தையிடம் தன்னை அறியாமலேயே ஒரு வித பாச உணர்வும் மரியாதையும் கிஷ்முவிற்கு வரத் தொடங்கின. இந்தியா சென்று ஒரு கால் கட்டும் போட்டுக் கொண்டு புது வாழ்வும் தந்தையின் பாசமும் அவனுக்கு வாழ்வின் சிறந்த நாளாகத் திகழ்ந்தது. பிறகென்ன, அடுத்த வருடம் ஒரு பேரனையும்; இன்னும் 3 வருடம் கழித்து ஒரு பேத்தியையும் பார்த்து விட்டு கால மானார் கிஷ்முவின் அப்பா.
இந்தியாவில் இறுதிச் சடுங்குகளை முடித்து விட்டு தன் தாயுடன் அமரிக்கா வரும் நாளில் தந்தையின் டைரி ஒன்றவனுக்கு தென்பட்டது. அதின் பக்கங்கள் முழுதும் ஒரு வரியால் நிறப்பப் பட்டதை பார்த்த அவன் கண்களில் உப்பு கலந்த நீர் வீழ்ச்சி. "என் மகனைப் போன்று வேறொரு மகன் கிடையாது" என்றது அந்த பக்கங்கள்.
இன்னும் எத்தனையோ கல்லறை உணர்வுகளுடன் கள் நம் இந்திய மண்ணில் தந்தைகள்.
3 comments
touching..
Posted on 8:24 PM
touching. touching...
(he hee second comment adhaan) :)
Posted on 2:26 AM
Every gifted father is like that,the story of Kishmukumar is it of you kitcha.
Posted on 8:27 PM