இருளைத் தேடும் வாழ்க்கையில்
மற்றுமொருநாள் விடிந்தது
அதே ரோட்டைப் பார்த்த அவன் கண்கள்
சில்லென்ற கிளியின் விழியில் விழுந்தது
உச்சி வெய்யிலில் நடக்கும் தாத்தாவைப் போல
கால்கள் விரிந்து நடந்தான்
இப்படியும் ஒரு அழகா என்று
வியப்பில் நடந்தே அலுவலகத்தை அடைந்தான்
அவன் சென்ற நேரம்
அலுவலகமே மூடியது
பொருப்பில்லாத அவனுக்கு
வேலை நீக்கக் கடிதம் வாசலில் நாடியது
காதல் செய்ய சந்தர்ப்பம் என்று
பேரின்பமாய் கைகள் வாங்கியது
மருநாள் அவளைத் தொடர்ந்து பார்த்தால்
அவன் கால்கள் அவன் அலுவலகத்தையே தேடியது
வேலைப் பற்று ஒன்றும் அல்ல
அவள் அவன் இடத்தை பிடித்து விட்டாள்
விழியில் விழுந்ததோ இவன் கண்கள்
குழியில் விழுந்ததோ இவன் கால்கள்
2 comments
kittu, eppadi ippadi ellam. kavidhaiyila shorta kadhai solli kalakareenga!
nalla irukku :)
Posted on 7:10 PM
avvvvvvv.. idhu kavidhainu nenachu padicha dreamz sonna maadiri ullara oru kadhaiyae oduthu :)
Romba busy aayiteengala? romba naalae postae illama irundhudhu?
Posted on 9:09 PM