Free Music Production Video Tutorials

↑ Grab this Headline Animator

"முதல் வெற்றி"

Posted by Swamy Srinivasan aka Kittu Mama On 9:58 AM

ஒரு 20 குடும்பங்கள் சுற்றி வாழும் சூழலில் வாழ்ந்து வந்தான் கதிர் நாராயணன். எப்பொழுதும் இரைச்சல் ஓசைகளோடு வாழ்வது அங்கு எல்லோர்க்கும் பழகிய விஷயமாகத் தோன்றியது. இது போதாதென்று பக்கத்தில் இருக்கும் சினிமா கொட்டையில் இருந்து வரும் சத்தம் வேறு.

அதி காலையில் சூரியன் எட்டிப் பார்க்கும் வேளையிலேயே சில குடும்பங்கள் எழுந்து விட்டன. கிணற்றில் நீர் இரைத்துக் கொண்டும், பாத்திரங்களைத் தேய்த்துக் கொண்டும் இருந்தனர் சிலர். கதிரின் எதிர் வீட்டில் மாலதியின் அம்மா, வாசலில் மிக அழகான கோலமொன்றை போடத் துவங்கினாள். பக்கத்து வீட்டில் இருக்கும் கதிருடைய நண்பன் பாலாஜியின் தாத்தா, கோலம் போடுவதை நோட்டம் இட்டுக் கொண்டே தினத் தந்தியை தலை கீழாகப் படித்துக் கொண்டு இருந்தார்.

கதிரின் அம்மா ஜானகி "கதிர் கதிர்" என்று கூவிக் கொண்டு இருக்க, பயத்துடன் வேகமாக மொட்டை மாடியில் இருந்து இறங்கி வந்தான் கதிர். என்ன மாஹ் என்ற ஒரு பீதிக் குரலோடு கேட்டான். ஓங்கி அவன் தலையில் நருக்கென்று கொட்டு வைத்துவிட்டு, எத்தனை தடவை சொல்லி இருக்கேன் உனக்கு. மொட்டை மாடியில் பால் விளையாடாதே, என்று சொன்னாள். நான் பால் ஆடலை மா, என்று சொன்னதும், பொய் சொன்னா போஜனம் கிடைக்காது டா உனக்கு. யேன்டா இப்படி Cricket விளையாடரேன்னு சொல்லி என் உயிரை எடுக்குற. நீயும் எதிர் வீட்டு பாலாஜியும் ஆடினதா உன் தங்கை ரேக்கா என் கிட்ட சொல்லிட்டா. நான் இப்ப தான் ஊர்ல இருக்கும் அத்தை வீட்ல இருந்து வரேன். வந்ததும் உன்னைக் காணோம். இப்படி தூங்காம நடு ராத்திரி இருந்து இன்னொரு வாட்டி ஆடின, நான் என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாது. கதிர் தன் தாயின் கோவத்தை உணர்ந்து, இனிமே கண்டிப்பா ஆட மாட்டேன் மா என்று சொன்னதும் தாயின் மனமும் மலையில் இருந்து தூக்கி போட்ட கல்லைப் போன்று வேகமாக இறங்கியது. இத பாரு கதிர், நீ Cricket ஆடு பா. ஆனா நம்ப குடும்பத்த நீ தாண்டா செல்லம் காப்பாத்தனும். அப்பா போய் 3 வருஷம் ஆகுது. நானும் ரேக்காவும் உன்ன தான் நம்பி இருக்கோம் என்று சொன்னதும் கதிர் மனம் உருகியது. வீட்டில் நடக்கும் கூத்து சுற்றி இருக்கும் எல்லோருக்கும் தெரிவதால் கதிருக்கு ஒரு மாதிரி ஆயிற்று. குறிப்பாக மாலதி இதை எல்லாம் எதிர் வீட்டில் இருந்து கேட்டு இருப்பாளோ என்ற சந்தேகம் வேறு. உள்ளே அவன் அரைக்கு போகும் வழியில் ரேக்காவைப் பார்த்ததும் "எறுமை" என்ற முழு கோவத்தோடு திட்டிவிட்டு போனான் கதிர்.

கதிரும் தீவிரமாக படித்தாலும் இடை இடையே உள்ள Cricket மோகம் அவனை விட்டுப் போகவே இல்லை. நீ Cricket(ஐ) விட்டால் என்னைத் தருவேன் என்ற மாலதியின் காதலையும் தூக்கி எறிந்தான். பள்ளிக்குச் செல்லும் போது ஒரு Motor Cycle அவன் காலில் ஏறிய செய்தி கேட்ட அவன் தாய் பதறிக் கிடக்கும் பொழுது கதிரை அவனது நண்பர்கள் அவனை கைத்தாங்கலாக அழைத்து வந்தனர். Cricket சிந்தனையில் ரோடு cross பண்ணினதால் இப்படி ஆயிற்று; ஆனால் பயப்படும்படி இல்லை என்று நண்பர்கள் சொன்னதும் அவன் அம்மா, கதிர் நீ எங்களுக்கு உயிரோடு வேணும். உயிரோடு வேணும் என்று கதரி அழுதாள். அன்று இரவு தூங்கிய வேளையில், கதிரின் அப்பா, கதிரின் அம்மா கனவில் வந்த வேளையில் "அம்மா" என்ற மரண ஒலி வந்ததை கேட்டு மிரண்டு எழுந்தாள். ஓடி வந்து கதிரைப் பார்த்தால் அவன் நன்கு தூங்கிக் கொண்டு இருந்தான். மருபடி அம்மா என்ற சத்தம் பக்கத்தில் இருக்கும் சினிமா கொட்டையில் இருந்து வருவதை உணர்ந்து அவள் அன்று தூங்கவே இல்லை. காலையில் விடிந்ததும் ரேக்கா, அம்மா அம்மா என்று எழுப்ப சத்தமே வராமல் கிடந்தாள் கதிரின் அம்மா. அவளின் மறைவு சுற்றி இருக்கும் எல்லோர்க்கும் ஒரு பாடமாக அமைந்தது. கதிர் தன் தாயைக் கொன்றதாக எண்ணி வாழ்ந்து வந்தான் .கடின உழைப்பில் ஒரு பெரிய Industrialistஆக முன்னேரினான்.

பணத்தை சம்பாதித்தாலும் அவனுக்கு உயிராய்த் தோன்றிய அம்மாவும் மாலதியும் தன்னை விட்டுப் பிரிந்ததை அவனால் மறக்க முடியவில்லை. ரேக்காவுக்கு ஒரு நல்ல இடத்தில் கொடுத்து விட்டு தன் வாழ்க்கையின் கனவாக நினைக்கும் Cricket(ஐ) அடையா விட்டாலும் அவனின் முன்னேற்றத்தில் "Cricket coaching club for new talents" ஒன்று ஆரமித்து பல பேருக்கு வாழ்வினை அளித்தான்.
அந்த Club(ர்க்கு) "Talent Tigers" என்ற பெயரும் சூட்டினான். அவன் கடைசியாக BCCI head போஸ்ட்டின் இடத்தை பிடித்து வாழ்வின் பயனை அடைந்ததை உணர்ந்தான் கதிர். இவனுக்காக மறைமுகமாகக் காத்துக் கொண்டு இருந்த மாலதி இவனைத் தேடி வந்ததும் "வாழ்க்கையில் நல்லதும் சில சமயம் வேகமாக நடக்கக் கூடும் என நம்பினான்". அவர்களுக்கு பிறந்த மகனை இந்திய அணியில் ஆடவைத்து உயிர் துறந்தான் கதிர். மாலதி கதிரின் Industrial வேலைகளைக் கொஞ்ச நாள் பார்த்து அவளும் கதிரிடம் சென்றடைந்தாள்.

இப்படி எல்லாம் செய்த என் அப்பாவிர்க்கு பிறந்ததே எனக்கு முதல் வெற்றி என்று கதிரின் மகன் யாதவ் நாராயணன் உலகக் கோப்பையை வாங்கும் பொழுது கூரிய செய்திகள் BBC(இல்) ஒலித்தது. இந்தியாவில் நல்ல talent(ர்க்கு) Sponsor செய்ய Multi National Companies எல்லாம் போட்டி போட்டு வந்தன. கதிர் நாராயணன் பெயர் Cricket இருக்கும் வரை ஒலித்தது. உலக நாடுகளில் இந்திய அணி என்றுமே No.1 ஆகத் திகழ்ந்தது.

,
|

10 comments

  1. Dreamzz Said,

    ஆஹா! உணர்ச்சி பூர்வமான கதை! நல்லா இருக்கு!

    Posted on 7:03 PM

     
  2. Dreamzz Said,

    இது போல நிறைய சிறு கதைகள் வேண்டும்!

    Posted on 7:04 PM

     
  3. G3 Said,

    Asathiteenga :) Supera irundhudhu :)

    Posted on 12:31 AM

     
  4. ambi Said,

    எப்படி இப்படியேல்லாம்? மொதலில் விரிவாக ஆரம்பித்து, நடுவுல ஸ்பீடு எடுத்து, கடைசில ரெம்ப வேகமா முடிஞ்ச மாதிரி ஒரு பீலீங்க். :)

    ஒரு சின்ன சஜஷன், "and they lived happily"nu கதையா சொல்லாம, வசனங்களை வைத்து கதையை நகர்த்தும் டெக்னிக் நல்லா வர்கவுட் ஆகும்.

    Posted on 6:25 AM

     
  5. Anonymous Said,

    Hi Kittu mama

    Nice concept. But one suggestion. The narration of the story can be little better and please try to avoid spelling mistakes. Me too write tamil poems and short stories. Only recently I started blogging. I am writing the meaning for Thirukural in kavithai style. Just giving a try. Completed Arathupaal. (i,e 380 kural).
    If u r interested I will send a sample of that.

    my email ID is nirmalajude@yahoo.co.in

    Posted on 7:09 AM

     
  6. @dreamz
    thank you

    @g3
    Thank you

    @ambi
    //எப்படி இப்படியேல்லாம்? மொதலில் விரிவாக ஆரம்பித்து, நடுவுல ஸ்பீடு எடுத்து, கடைசில ரெம்ப வேகமா முடிஞ்ச மாதிரி ஒரு பீலீங்க். :)//

    romba romba romba correct. oru planae illaama story on the fly random'aa thattina eppadi varumnu oru muyarchi dhaan idhu :-)

    //வசனங்களை வைத்து கதையை நகர்த்தும் டெக்னிக் நல்லா வர்கவுட் ஆகும். //

    Yeah. Naan screenwriting ellaam padichu irukkaen. andha maadiri oru nalla screen play with dialogues ezudhanumnu aasai. Hope i'll get to that soon.

    Thanks for those suggestions ambi.
    marriage life eppadi poguduhu. neenga mudhalla sonna comment maadhiri dhaan irukkum marriage life...but enna thala keeza irukkum. eppadinna :

    மொதலில் speed aaga ஆரம்பித்து, நடுவுல ஸ்பீடு koranju, கடைசில ரெம்ப slowa vaa oodra மாதிரி irukkum :-)

    @ranisha
    welcome to my blog.

    //Nice concept. But one suggestion. The narration of the story can be little better and please try to avoid spelling mistakes. Me too write tamil poems and short stories. // Your write. This is just a true run time narration. That is i didnt upfront think for this story. i wanted to do a running writing..but i hope i was able to achieve something atleast to call it as a story LOL

    Spelling mistakes. Hmm you have to forgive me..I love to write without mistakes but enna panradhu...I need a spelling correctornu ninaikiraen :-)

    About your thiru kural muyarchi. My warm welcome and wishes on that..I'll definitely take a look at your blog.

    Posted on 9:34 AM

     
  7. @ranisha
    aaaaaha englishlayum spelling mistake aaaaa..enna kodumai sir idhu.....

    //Your write// should be read as your right :-)

    Posted on 9:39 AM

     
  8. Anonymous Said,

    //married life - மொதலில் speed aaga ஆரம்பித்து, நடுவுல ஸ்பீடு koranju, கடைசில ரெம்ப slowa vaa oodra மாதிரி irukkum //

    LOL, unmai ejamaan unmai! 200% unmai. idhellam munnadiye yen sollala?(innocently)

    Posted on 1:39 AM

     
  9. Unknown Said,

    Nalla kathai kitcha.

    Posted on 8:40 PM

     
  10. jasonbob Said,

    Posted on 1:31 AM

     
Facebook Twitter Youtube Linked In Orkut